அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திருப்பூரில் உடுக்கை அடித்து போராட்டம்
திருப்பூர், அக்.8- 52 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் புத னன்று தமிழ்நாடு அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் உடுக்கை அடித்துப் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் 2003 க்கு பின்னால் பணியில் சேர்ந்த தொழிலாளர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய டி.ஏ. மற் றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழி லாளர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் - காங்கேயம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு 52 ஆவது நாளாக புதன் னறு தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடுக்கை அடித்து வேப்பிலை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவ நேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தொழிலாளர்களின் கோரிக் கைகளை ஏற்க மறுக்கும் மாநில அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் பி.கே.கருப்பசாமி, திருப்பூர் மாவட்ட சிஐடியு துணைத் தலை வர் கே.உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். இதில் பலர் பங்கேற்றனர்.
 
                                    