அரசு மருத்துவமனை செவிலியர்கள் காத்திருப்புப் போராட்டம்
திருப்பூர்,செப்.18- திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்ட நபர்களை கைது செய்யக் கோரி செவிலியர்கள் வியாழ னன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர், பி.என்.ரோடு, மேட்டுப்பா ளையத்தை சேர்ந்த நாகஜோதிகா என்ப வருக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை செவ்வாயன்று இறந்து விட்டது. மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான், இச்சம்பவம் நடந் ததாகக் கூறி பெண்ணின் உறவினர்கள் செவிலியர்கள், ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்து வமனை கண்ணாடி கதவும் உடைக்கப் பட்டது. இதில் செவிலியர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில், தாக்குதல் சம்ப வத்தில் ஈடுபட்டவர்கள் மீது மருத்துவ மனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கக் கோரி புதனன்று கருப்பு பட்டை அணிந்து அவர்கள் பணி செய்தனர். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வியாழனன்று செவிலியர்கள் நிர்வாக அலுவலகம் அருகே கருப்பு பட்டையு டன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அரசு மருத்துவக் கல் லூரியின் முதல்வர் (டீன்) மனோன்மணி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் கூறு கையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவதாகக் கூறி, போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மறுத்த செவிலியர்கள், நிர்வாக அலுவ லக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
