tamilnadu

img

கேங்மேன் பணியாளர்கள் 2 ஆவது நாளாக போராட்டம்

கேங்மேன் பணியாளர்கள்  2 ஆவது நாளாக போராட்டம்

ஈரோடு, அக்.8- கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் புதனன்று 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்  நடைபெற்றது. கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி  மாற்றம் வழங்க வேண்டும். விடுபட்ட கேங்மேன் பணியாளர்க ளுக்கு பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மின்  ஊழியர் மத்திய அமைப்பினர் புதனன்று 2 ஆவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத் தின் மண்டலச் செயலாளர் பி.ஸ்ரீதேவி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எச்.ஸ்ரீராம் துவக்கவுரை யாற்றினார். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் ஆர்.ஜான்சன், வி.இளங்கோ, மண்டலத் தலைவர் சி.ஜோதி மணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.