சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஎம் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா-வின் பிறந்தநாள் விழா செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. சிபிஎம் தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூரி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், எம்.முத்து, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.