இலவச கண் மருத்துவ முகாம்
திருப்பூர், ஜூலை 27- ரீடு தொண்டு நிறுவனம் மற்றும் திருப்பூர் டாக்டர் அகர் வால் கண் மருத்துவமனை, இணைந்து தேவம்பாளையம் கிராம பொதுமக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலா ளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இம்முகாமை திட்ட ஒருங்கிணைப்பாளர் சூர்யா துவங்கி வைத்தார். ரீடு நைனான் வாழ்த்திப் பேசி னார். இம்முகாமில் 48 கிராம பொதுமக்கள் மற்றும் 54 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்த னர். கள ஒருங்கிணைப்பாளர் வினோத் நன்றி கூறினார்.