இலவச கண் சிகிச்சை முகாம்
கோவை, ஆக.3- ரத்தினபுரியில் சிறுபான்மை மக்கள் நலக்குழு, அர விந்த் கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் ஆகி யவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகா மில் பலர் கலந்து கொண்டனர். கோவை, ரத்தினபுரி, நேரு வீதியில் உள்ள மாந கராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்ற இம்முகாமில், கண்புரை, கிட்டப்பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து உயர் ரத்த அழுத்தம், எலும்பு மூட்டு தேய்மானம், மற்றும் சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் என்.ஆர்.முருகேசன், மாவட்டத் தலைவர் எம்.ஜெரோம் ரோட்டேக்ஸ், மாவட் டச் செயலாளர் ஏ.சாதிக்பாட்ஷா, லைன்ஸ் கிளப் நிர்வா கிகள், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் 250க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.