முட்டை முதலீடு லாபம் எனக்கூறி மோசடி
கோவை, ஆக.21- முட்டை கொள்முதலில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி பாதிக் கப்பட்டவர்கள் கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த னர். கோவை, சித்தாபுதூ ரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு கொண்ட செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்சேட் என்பவர், நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருவதாகவும், தனக்கு மிகக்குறைவான விலையில் முட்டை கிடைப்பதால் தன்னிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என கூறி யுள்ளார். மேலும், ரூ.10 லட்சம் முதலீடு செய் தால் தினமும் ரூ.22 ஆயிரம், ரூ.20 லட்சம் முத லீடு செய்தால் ரூ.44 ஆயிரம் லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய சரஸ்வதி வங்கி கடன், சேமிப்பு, மற்றும் நகையை அட மானம் வைத்து ரூ.35 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால், 2 ஆண்டுகளாக லாப மும் கொடுக்காமல், முதலீடு பணத்தை கொடுக்காமல் ராம்சேட் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சரஸ்வதி விசாரித்ததில், பல பேரை ராம்சேட் மோசடி செய்து பணம் பறித் தது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப் பட்ட 7 பேர் வியாழனன்று கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித் தனர். இதேபோல பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதால் உடனடியாக ராம்சேட் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.