tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை  அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது

சேலம், செப்.3- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அதிமுக முன் னாள் கவுன்சிலரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம், கஸ்தூரிபாய் தெரு வைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (64). அதிமுக முன்னாள் கவுன் சிலரான இவர், தற்போது எம்ஜிஆர் மன்ற நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். அப்பகுதியில் இவர் நடத்தி வரும்  பெட்டிக்கடைக்கு, சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்க வந்துள் ளார். அப்போது, அச்சிறுமிக்கு அர்ச்சுணன் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெற் றோர் அளித்த புகாரின் பேரில், நகர மகளிர் காவல் ஆய்வா ளர் கலைவாணி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அர்ச்சுணனை கைது செய்தனர்.

தாட்கோ கடன் வழங்க வங்கி நிர்வாகம் ஒப்புதல் தீஒமு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

ஈரோடு, செப். 3: பெருந்துறை அருகே, தாட்கோ திட்டத் தின் கீழ் பன்றி வளர்ப்புத் தொழிலுக்காகக் கடன் கோரிய பயனாளிக்கு, வங்கி நிர்வா கம் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு முன் னணி திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் தற் காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த பூபால குமார், 2024-25 ஆம் ஆண்டுக்கான தாட்கோ (தாட்கோ: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) திட்டத் தின் கீழ் பன்றி வளர்ப்புத் தொழிலுக்குக் கடன் வேண்டி விண்ணப்பித்தார். அவரது  விண்ணப்பம் ஏற்கப்பட்டு, நல்லாம்பட்டியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு அனுப்பப்பட்டது. கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட தால், பூபாலகுமார் தனது சொந்த செலவில் ரூ.1.25 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, ரூ. 1.40 லட்சத்தில் கொட்டகை மற்றும் வேலி  அமைக்கும் பணிகளை முடித்தார். ஆனா லும், வங்கி நிர்வாகம் கடன் வழங்காமல் இருந்து வந்தது. இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான அவர், தனது பண்ணை அமைந்துள்ள இடத்தின் கிரையப் பத்தி ரத்தை பிணையாகத் தருவதாகவும் கூறினார்.  ஆனாலும், கடன் வழங்குவதில் வங்கி தயக் கம் காட்டியது. வேறு வழியின்றி, கடன் கிடைக்கும் வரை  வங்கி முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத் தப் போவதாக பூபாலகுமார் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதன்  அடிப்படையில், புதன்கிழமை அன்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி  மறுத்த போதிலும், தடையை மீறிப் போராட் டம் நடைபெறும் என ததீஒமு அறிவித்தது. இந்தச் சூழலில், வங்கி நிர்வாகம் கடன்  வழங்குவதாக ஒப்புதல் கடிதம் அளித்தது. அந்தக் கடிதத்தில், கடன் தொகை ரூ.3.60  லட்சம் என்றும், அதில் தாட்கோ மானியம்  ரூ.2.10 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. வங்கியின் இந்த ஒப்புதலை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப் பட்டுள்ளதாக ததீஒமு மாவட்ட உதவிச் செய லாளர் என்.பாலசுப்பிரமணி தெரிவித்தார்.

ஒகேனக்கலில் பரிசல் இயக்க ஆட்சியர் அனுமதி

தருமபுரி, செப்.3- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ள தால், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கு வதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அனுமதி  அளித்துள்ளார். கேரளம் மற்றும் கர்நாடகா மாநில காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு மழைப் பொழிவின் காரணமாக, கர்நாடகா மாநிலத்தி லுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர்  அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு  அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில்  விநாடிக்கு 43 ஆயிரம் கனஅடி வரை தண் ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல்  பயணம் மேற்கொய்வதற்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், காவிரி ஆற்றில் செவ்வா யன்று விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, புதனன்று விநாடிக்கு 9,500  கனஅடியாக குறைந்தது. இதை யடுத்து ஒகேனக்கலில் மூன்று நாட்களுக் குப் பிறகு புதனன்று முதல் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ்  அனுமதி அளித்துள்ளார். இருப்பினும் அரு விகளில் குளிப்பதற்கு 4 ஆவது நாளாக தடை  நீட்டிக்கப்பட்டுள்ளது.