வெள்ள நீர் வடிந்தது: வீடுகளுக்கு திரும்பிய மக்கள்
நாமக்கல், ஜூலை 31- குமாரபாளையத்தில் காவிரி கரை யோரப் பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர் வடிந்ததால், முகாம்களில் தங்க வைக் கப்பட்டிருந்த பொதுமக்கள் தற்போது வீடுகளுக்கு திருப்பினர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரண மாக மேட்டூர் அணை அதன் முழு கொள் ளளவான 120 கன அடியை எட்டியதை யடுத்து, அணைக்கு வந்த நீரானது காவிரியில் அப்படியே திறந்து விடப் பட்டது. இதனால் காவிரி கரையோரப் பகுதியான நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சிக்குபட்ட பொன்னியம்மாள் சந்து, கலைமகள் வீதி, மணிமேகலைத் தெரு மற்றும் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 75 குடும்பத்தினரை வருவாய்த்துறையினர் மற்றும் நக ராட்சி அதிகாரிகள் அரசுப் பள்ளியிலும், நகராட்சி திருமண மண்டபத்திலும் தங்க வைத்து உணவு மற்றும் மருத்துவ வச திகள் செய்ய கொடுத்திருந்தனர். தற் போது, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 40 ஆயிரம் கன அடி வீதம் குறைந் ததால், வெள்ள அபாய எச்சரிக்கை நீங் கியதையடுத்து, வெள்ளம் சூழ்ந்த பகுதி களில் உள்ள வீடுகளை ஆய்வு செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரும் குறைய தொடங்கியது. இதனால் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள், தங்களது குடியிருப்பு களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையிலிருந்த பவானி - குமாரபாளையத்தை இணைக்கும் சிறு பாலம் மீண்டும் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற் போதைய சூழலில் நீர்வரத்து குறைந்து, பொதுமக்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பியிருந்தாலும், கர்நாடகா மாநி லத்தில் மீண்டும் கனமழை பெய்யும் பட்சத்தில் மேட்டூர் அணையில் நீர்வ ரத்து அதிகரிக்க துவங்கும். இதனால் நீர்வரத்து குறித்து கண்காணித்து வரு வதாக வருவாய்த்துறையினர் தெரிவித் துள்ளனர்.