காவிரியில் வெள்ளப்பெருக்கு: முகாம்களில் பொதுமக்கள் தங்கவைப்பு
நாமக்கல், ஜூலை 29- பரமத்திவேலூர் வழியாக பாயும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால், கரையோர மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாழ் வான பகுதியிலிருந்த பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கவும் வாய்ப் புள்ளது. இதனால் சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், ஜேடர் பாளையம், வடகரை யாத்தூர், ஆனங் கூர், அ.குன்னத்தூர், பிலிக்கல்பாளை யம், சேளூர், கொந்தளம், வெங்கரை, பொத்தனூர், பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, கொமராபாளையம், மோகனூர் உள்ளிட்டபல்வேறு பகுதி களில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக ளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட் டது. மேலும், பொதுமக்கள் யாரும் ஆற் றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன் பிடிக்கவோ, அக்கறைக்கு ஆற்றை கடந்து செல்லவோக் கூடாது. அவசர உதவி எண்களான 1077, 100, 101,104,108 ஆகிய எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. முகாமில் ஆட்சியர் ஆய்வு இந்நிலையில், திங்களன்று குடி யிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்ததால், மணிமேகலை தெரு, இந்திரா நகர் பகுதி யைச் சேர்ந்த 35 குடும்பத்தினர் புத்தர் தெரு நகராட்சி உயர்நிலைப்பள்ளியி லும், கலைமகள் தெரு மற்றும் பொன்னி யம்மா சந்து பகுதியைச் சேர்ந்த 45 குடும்பத்தினரும் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள னர். மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெள்ளப்பெருக்கு குறித்து ஆய்வு செய்ததுடன், முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள் ளது. ஆனால் வீடு கட்ட போதிய வசதி யில்லை என தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர், கலைஞர் கனவு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்ட உதவிகள் செய்வ தாக உறுதியளித்தார். இதேபோன்று, குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பி னர் தங்கமணி, முகாம்களிலுள்ள பொது மக்களை சந்தித்து குறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில், வட்டாட்சி யர் சிவக்குமார், நகர்மன்றத் தலைவர் விஜயகண்ணன், திமுக மேற்கு மாவட் டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.