tamilnadu

img

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

திருப்பூர், அக்.11- தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் பொதுமக்கள் பாது காப்பாக பட்டாசு வெடிப்பது மற்றும் வெடித்த பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சனி யன்று நடைபெற்றது. தீயணைப்பு துறை சார்பில் தமிழ் நாடு முழுவதும் பொது மக்களுக்கு தீ  பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தற் காப்பு பயிற்சிகளை வழங்கும் வகை யில் வாங்க கற்றுக் கொள்வோம் எனும்  தலைப்பில் சிறப்பு நிகழ்வு சனியன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள  வடக்கு தீயணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வை மாவட்ட தீய ணைப்பு அலுவலர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இதில் வீடுகளில் தீ  விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் உடனடியாக அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள், பின்ன லாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூ ரில் நிறுவனங்களில் ஏற்படும் தீ விபத் துக்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் தீ பரவாமல்  இருக்க செய்ய வேண்டிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதே போல், இயற்கை பேரிடர் காலங்களின்  போது தங்களை தற்காத்துக் கொள் வது மட்டுமல்லாது, தங்களோடு பாதிப் புக்குள்ளாகும் நபர்களையும் பாதுகாப் பான முறையில் மீட்டெடுப்பது உள்ளிட் டவை குறித்து பயிற்சிகள் செய்து காட் டப்பட்டது. இயற்கை பேரிடர் மற்றும் தீ  தடுப்பு பணியின் போது பயன்படுத்தப் படக்கூடிய உபகரணங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து பொது மக் களுக்கு சோதனை முறையில் காட்டப் பட்டது. மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய நிலையில் பொது மக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப் பது மற்றும் வெடித்த பட்டாசுகளை  பாதுகாப்பான முறையில் அப்புறப்ப டுத்துதல் உள்ளிட்டவை குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட உதவி தீய ணைப்பு அலுவலர் வீரராஜ், கல்லூரி மாணவ மாணவியர்கள், பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து  கொண்டனர். சனி மற்றும் ஞாயிறு  ஆகிய 2  நாட்கள் 6 பிரிவுகளாக பொது மக்களுக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தீயணைப்பு  துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.