ஈரோடு மாநகராட்சி, பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திர குமார், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிர மணியம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ. சுகுமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
