காலிக்குடங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், செப்.17- முறையான குடிநீர் வழங்கக்கோரி தமிழ் நாடு விவசாய சங்கத்தினர் ராமாபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்க ளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் ராமா புரம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணமார் நகர் மற்றும் சுமங்கலி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இந்த பகுதி மக்களுக்கு இதுவரைக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீருக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ராமபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பொதுமக் கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பி லும் பலமுறை மனு கொடுக்கப்பட்டும் குடி நீர் பிரச்சனை தீரவில்லை. இதனால், ஆவேசமடைந்த இப்பகுதி மக் கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர், உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் ராமாபுரம் வழியாக நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை இயப்க்க பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி புதனன்று ராமா புரம் ஊராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே. பூபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட் டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.வேலாயுதம், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டப் பொருளா ளர் பி.தங்கரத்தினம், சிபிஎம் மல்லசமுத்தி ரம் ஒன்றியச் செயலாளர் வி.தேவராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
