tamilnadu

img

வங்கி மேலாளர் களவாடிச்சென்ற நகைகளை மீட்டுத் தர விவசாயிகள் போராட்டம்

வங்கி மேலாளர் களவாடிச்சென்ற நகைகளை மீட்டுத் தர விவசாயிகள் போராட்டம்

கோபி, ஆக.25- கோபி அருகே டி.ஜி.புதூரில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட 345  சவரன் நகைகளை மீட்டுத் தர வேண்டி வங்கியின் முன் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள டி.ஜி.புதூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம  வங்கியில் கடந்ந 2021 முதல் 2022  வரை அப்பகுதியை சேர்ந்த விவ சாயிகள், வாடிக்கையாளர்கள என 40க்கும் மேற்பட்டோர் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற் றுள்ளனர். இதனையடுத்து சில  மாதங்களுக்கு பிறகு அடகு  வைத்த நகையை மீட்க சென்ற போது வங்கி பெட்டகத்திலிருந்து நகைகள் மாயமாகிவிட்டது தெரிந் தது. இதுகுறித்து விவசாயி கள், வாடிக்கையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது வங்கியின் மேலாளர் மணிகண்டன் என்பவர் 345 சவரன் நகையை கையாடல் செய்து பல்வேறு நகை அடகு நிறு வனங்களில் அடகு வைத்த பணத்தை சூதாட்டத்தில் இழந்தது தெரிய வந்தது. நகைகளை வங்கி நிர்வாகம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு போராட் டங்களை விவசாயிகள் நடத்தியும், வங்கி நிர்வாகம் நகைகளை ஒப் படைக்காமல் காலம் தாழ்த்தி வந்த னர். இதனை கண்டித்து திங்களன்று  டி.ஜி.புதூர் தமிழ்நாடு கிராம வங்கி யின் முன்பு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு  கரும்பு விவசாயிகள் சங்க நிர் வாகி கே.பி.சின்னச்சாமி தலைமை யில் விவசாயிகள் மற்றும் வாடிக் கையாளர்கள் என 50க்கும் மேற் பட்டோர் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்து வந்த  வங்கியின் மண்டல மேலாளர் தலைமையிலான குழு மற்றும்  காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி  நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் உடன்பாடு ஏற்படாததல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபடுவதாக கூறி வங்கி முன் னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கி நிர்வாகம் வாடிக்கை யாளர்களின் நகைகளை வழங்குவ தாக கூறுவதை எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே காத்தி ருப்பு போராட்டத்தை கைவிடுவ தாக கூறினர். இதில், தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம். முனிசாமி, மாவட்ட துணைத் தலை வர் எஸ்.முத்துச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.எம்.விஜயகுமார், கோபி தாலுகா செய லாளர் க.பெருமாள், கருப்பு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.