புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி பொள்ளாச்சி எம்.பி-யிடம் விவசாயிகள் மனு
பொள்ளாச்சி, ஆக.31- புறவழிச்சாலை திட்டத்தை கைவிட தமிழக அரசை வலியுறுத்தக்கோரி, விவ சாயிகள் சங்க கூட்டமைப்பினர் கே.ஈஸ் வரசாமி எம்.பி-யிடம் நேரில் மனு அளித்த னர். கோவை மாவட்ட வளர்ச்சி என்ற பெயரில், கிழக்கு மற்றும் மேற்கு புற வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டு, விவசாயிகள் தங்களின் வாழ்வா தாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. இதனை எதிர்த்து கடந்த 8 ஆண்டு களாக விவசாயிகள் போராடி வருகின்ற னர். தற்போது திட்டமிட்ட கிழக்கு புற வழிச்சாலையை சிறிது மாற்றி அமைக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகள் இதுபற்றி தெரியாது என்கின்றனர். இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, அதனால் மக் களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தற் போதைய திட்டத்தை கைவிட தமிழக அரசை வலியுறுத்துமாறு, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சாமியிடம், விவசாயிகள் சங்க கூட் டமைப்பினர் ஞாயிறன்று நேரில் மனு அளித்தனர். பொள்ளாச்சி, வடசித்தூ ரில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோன்று, சூலூர் தாலுகா, கிட் டாம்பாளையம் எம்.எஸ்.எம் ஹாலில் நடைபெற்ற விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில், கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, துணைச்செயலாளர். ஜெ.ரவீந்திரன். திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் வை.பழனிசாமி உட்பட 200க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட னர்.