tamilnadu

img

பணத்தை பெற்றுத்தரக்கோரி பட்டு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

பணத்தை பெற்றுத்தரக்கோரி பட்டு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

உடுமலை, செப்.16- பட்டுக்கூடு விற்பனை செய்த விவசாயிகளுக்கு, பணத்தை பெற்றுத்தரக்கோரி  பட்டு விவசாயிகள் செவ்வா யன்று காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடு மலை அமராவதி செக் போஸ்ட் அருகில் உள்ள சில் வர் மைன் சில்க்ஸ் பிராச சர்ஸ் என்ற நிறுவனம் பட்டு  விவசாயிகளிடம் பட்டுக்கூடு வாங்கிய வகை யில், திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட் டத்தை சேர்ந்த 81 விவசாயிகளுக்கு ரூ.24  லட்சத்து 47 ஆயிரத்து 416 தர வேண்டி யுள்ளது. பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக் குநர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட  ஆட்சியர் ஆகியோரிடம் இதுகுறித்து பல முறை மனு அளித்தும் இதுவரை  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் புதனன்று,  பாதிக்கப்பட்ட பட்டு விவசாயிகள் தமிழ்நாடு  பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்க  மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமை யில், மைவாடியில் உள்ள பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்  காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.