திருமணிமுத்தாறு உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றிடுக விவசாயிகள் சங்கத்தினர் இருசக்கர வாகனப் பேரணி
நாமக்கல், செப்.12- மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர். மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திரு மணிமுத்தாற்றில் இணைக்க வேண் டும் என வலியுறுத்தி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசா யிகள் போராடி வருகின்றனர். அவ் வாறு இணைத்தால் நாமக்கல் மாவட் டத்திலுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். மல்லசமுத்திரம், எலச்சிபாளை யம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், மோகனூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகள் இந்த உபரிநீரால் பயனடையும். கடந்த 50 ஆண்டுக ளுக்கு முன்பு விவசாயிகளின் கோரிக்கையை, மார்க்சிஸ்ட் கட்சி யின் அப்போதைய சட்டமன்ற உறுப் பினர் மறைந்த தோழர் மோளியப் பள்ளி ராமசாமி, சட்டமன்றத்தில் கோரிக்கையாக விடுத்தார். இதற்கு அப்போதைய அரசு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல் படுத்தப்படும் என தெரிவித்தது. ஆனால், இதுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இத் திட்டத்தை விரைந்து செயல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் வெள்ளியன்று இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர். முன்னதாக, மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் மேட்டூர் வசந்தி கலைக்குழுவினர் நீர் பாது காப்பு குறித்து கலைநிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொ டர்ந்து, 20 கிராமங்களை இணைத்து 30 கிலோமீட்டர் தூரத்தை கடக் கும் வகையில், இருசக்கர வாகனப் பேரணியை விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவரும், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார். விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் கே. பூபதி தலைமை வகித்தார். விவசா யிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.பெருமாள், மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், துணைத் தலைவர் ஆர்.வேலாயுதம், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.முத்துசாமி, பொரு ளாளர் தங்கரத்தினம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் தமிழ்மணி, சு.சுரேஷ், ஒன்றி யச் செயலாளர் தேவராஜ், நகரச் செயலாளர் சீனிவாசன், விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் குப்புசாமி, தலைவர் எல்பி.மனோக ரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மல்லசமுத்திரம், எலச்சிபா ளையம், வையப்பமலை உள்ளிட்ட இடங்களில் பிரச்சார பயணம் மேற் கொள்ளப்பட்டு, மாலை 5 மணியள வில் ராமாபுரத்தில் நிறைவடைந் தது.
