tamilnadu

img

தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு: சிஐடியு கண்டனம்

தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு: சிஐடியு கண்டனம்

உதகை, ஆக.24- தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கட்டுமா னத் தொழிலாளர் சங்க பேரவைக்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சிஐடியு கட்டிடம் மற்றும் கட்டு மானத் தொழிலாளர் சங்கத்தின் நீல கிரி மாவட்ட 4 ஆவது பேரவைக் கூட்டம், குன்னூரில் ஞாயிறன்று சங் கத்தின் தலைவர் பால்பாண்டி தலை மையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட நிர்வாகி ராஜன் துவக்கவுரை யாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ஜே.வர்கீஸ், பொரு ளாளர் சிவகுமார் ஆகியோர் அறிக் கைகளை முன்வைத்தனர். சிஐடியு  மாவட்டப் பொருளாளர் நவீன்சந்தி ரன், மூத்த தலைவர் சுப்பிரமணி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட் டத்தில், கட்டுமானத் தொழிலாளர்க ளின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 55 வயது நிறைவடைந்த பெண் தொழிலாளர்க ளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும். மலைப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் நலவாரியம் மூல மாக வழங்க வேண்டும். தொழிலாளர் களுக்கு நலவாரியம் மூலம் வீடுகள் கட்டித்தர வேண்டும். பந்தலூர், கூட லூர் பகுதியில் வனவிலங்கு - மனித மோதல் சம்பவத்தில் நடவடிக்கை  எடுக்கக்கோரி போராடும் தொழிலா ளர்கள் மீது பொய் வழக்கு போடக் கூடாது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக பால்பாண்டி, செயலாளராக கே.ஜே.வர்கீஸ், பொருளாளராக ஜான் உட்பட 15  பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டச்  செயலாளர் சி.வினோத் நிறைவுரை யாற்றினார். முடிவில், ஜி.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.