tamilnadu

img

பூக்கள் விலை சரிவு

பூக்கள் விலை சரிவு

கோவை, செப்.10- கோவையில் பூக்களின் விலை கடுமையாக சரிந் துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுக்கு உதகை, கோபி, சத்திய மங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள் தோறும் 10 முதல் 12 டன் உதிரிப் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் இருந்து, கேரளா வுக்கும் அதிகமான பூக்கள் அனுப்பப்படுகிறது. கடந்த 10 நாட்களாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்க ளின் விலை உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ மல்லி கைப்பூ ரூ.2,000 வரை விற்பனையானது, அரளிப்பூ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்பட்டது. ஆனால்,  பண்டிகை முடிந்ததால் தற்போது விலை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது கோவை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.350, முல்லைப்பூ ரூ.200, சாமந்திப்பூ ரூ.100, அரளி மற்றும் சம்பங்கிப்பூ கிலோ வுக்கு ரூ.50 என்ற விலையில் விற்பனையாகின்றன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “நவராத் திரி பண்டிகை வரை பூக்களின் விலை உயர வாய்ப் பில்லை. புரட்டாசி மாதத்தில் முகூர்த்த நாட்கள் இல்லாத துடன், தேய்பிறை தொடங்கிவிட்டதால் விலையில் ஏற்றம் இருக்காது. ஆயுத பூஜையின் போது மட்டுமே  விலை மீண்டும் உயரக்கூடும்” என்று தெரிவித்தனர்.