tamilnadu

img

முழுமையான வரி விலக்கு வேண்டும் என எதிர்பார்ப்பு

முழுமையான வரி விலக்கு வேண்டும் என எதிர்பார்ப்பு

பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

திருப்பூர், செப். 5- பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைத்திருப்பதை, ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், பால் பொருட்க ளுக்கு முழுமையான வரி விலக்கு அளித்து கால் நடை வளர்ப்பை  அதிகரிக்கச்செய்து, விவசாயிக ளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வழிவகுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.  அண்மையில், தில்லியில் நடை பெற்ற 56ஆவது ஜிஎஸ்டி கவுன் சில் கூட்டத்தில், ஏற்கனவே அதிக மாக இருந்த பல்வேறு பொருட்க ளுக்கான வரி சீரமைக்கப்பட்டுள் ளது. 5, 12, 18 மற்றும் 28 என படி நிலைகளில் இருந்த ஜிஎஸ்டி, தற் போது 5 மற்றும் 18 என இரு பிரிவு களாக குறைக்கப்பட்டுள்ளன. மேலும், சில பொருட்களுக்கு 40  சதவிகிதம் என தீர்மானிக்கப்பட் டுள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி நடை முறையால், பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இது தொழில்முனைவோர், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி வந்தனர். ஒன் றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி முறைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற் றும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டிருந்தனர். இந்நிலையில், 8  ஆண்டு பாதிப்பிற்கு பிறகு தற் போது ஒன்றிய அரசு, ஜிஎஸ்டி விகிதத்தில் ஒரு சிறு மாறுதலை ஏற்படுத்தி உள்ளது. இது முழுமை யான நிவாரணம் இல்லையென்ற போதிலும், ஒரு சிறிய நிவாரணமா வது கிடைத்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதில், பால் பொருட்களுக் கான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆகக்  குறைக்கப்பட்டிருப்பது, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியிலுள்ள வெண்ணெய் மற்றும் நெய் உற் பத்தியாளர்கள் இந்த வரி குறைப்பை வரவேற்றுள்ளனர். ஊத்துக்குளி பகுதி, பாரம்பரி யமாக கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பொருட்கள் உற்பத்திக்கு பெயர் பெற்றது. குறிப்பாக எருமை வளர்ப்பு இங்கு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்கள் இங்கு அதிகளவில் உற்பத்தி செய்யப் பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்ப னைக்கு அனுப்பப்படுகின்றன. ஜிஎஸ்டி விதிப்பால், சிறு மற் றும் குறு வெண்ணெய் உற்பத்தி யாளர்கள் கடந்த சில ஆண்டுக ளாக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தனர். இந்த வரி  குறைப்பு, அப்பகுதியில் மீண்டும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் தொழிலை ஊக்குவிக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பால் பொருட்களுக்கு முழுமையான ஜிஎஸ்டி விலக்கு அளித்தால் மட்டுமே விவசாயிக ளின் வாழ்க்கைத்தரம் மேலும் உய ரும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கே.எஸ்.டி. டைரிஸ் வெண் ணெய் உற்பத்தியாளர் சுப்பிர மணி கூறுகையில், “ஊத்துக்குளி யில் மாதத்திற்கு சுமார் 50 டன்  வெண்ணெய் உற்பத்தி செய்யப் படுகிறது. இதுவரை ஒரு 15 கிலோ வெண்ணெய் டின்னுக்கு ரூ.750 முதல் ரூ.800 வரையும், ஒரு டின் நெய்க்கு ரூ.1,200 வரையும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருந்தது. இதன் காரணமாக, வெண்ணெய் ஒரு கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.90 வரையும், நெய் ஒரு கிலோ வுக்கு ரூ.50 வரையும் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது வரி 5% ஆகக் குறைக்கப் பட்டிருப்பதால், வெண்ணெய் ஒரு கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40  வரையும், நெய் ஒரு கிலோவுக்கு  ரூ.50 வரையும் விலை குறைய  வாய்ப்புள்ளது. இது பொதுமக்க ளுக்கு பெரிய நிம்மதியை அளிக் கும். இந்த வரி குறைப்பு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது,” என்றார்.