ஈரோடு மாவட்டம், பெருந்துறை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சனியன்று நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி மாணவ, மாணவியர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்டு, நேரடியாக உரையாடி, அவர்களின் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். உடன் முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் உட்பட பலர் உள்ளனர்.