tamilnadu

img

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றிடுக

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றிடுக

உதகை, செப்.21- சாதி ஆணவப்படுகொலை களை தடுக்க தனிச்சட்டம் இயற்ற  வேண்டும் என வாலிபர் சங்க நீலகிரி  மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட 15  ஆவது மாநாடு, எருமாடு பகுதியில்  செப்.20, 21 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மணி கண்டன் தலைமை வகித்தார். ப்லிப் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் துவக்க வுரையாற்றினார். மாவட்ட நிர் வாகி சுதர்சன் அறிக்கையை முன் வைத்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. யோகண்ணன் வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், சாதி ஆண வப்படுகொலைகளுக்கு எதி ராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத  வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்ப டுத்தி, அதற்காக கையூட்டு பெறும்  அதிகாரிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். கோத்த கிரியில் மின்மயானம் அமைக்க வேண்டும். புளியம்பாறை நரங்காக டவு ஆற்றின் குறுக்கே முதல்வர்  ஒப்புதல் அளித்ததின் அடிப்படை யில், உடனடியாக கான்கிரீட் பாலம்  அமைக்க வேண்டும். வன விலங்கு கள் குடியிருப்புக்குள் வருவதை தடுக்கவும், வனவிலங்குகளின்  தாக்குதலில் உயிரிழந்தவரின்  குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி நிவார ணம், குடும்பத்தில் ஒருவருக்கு  அரசுப்பணி வழங்க வேண்டும்.  கூடலூர், பந்தலூர் தாலுகாவின்  மையப்பகுதியில் அரசு பொறியி யல் கல்லூரி அமைக்க வேண்டும்.  குன்னூர் பகுதியில் பொதுக்கழிப் பறை அமைக்க வேண்டும். சேதம டைந்த சாலைகளை விரைந்து சீர மைக்க வேண்டும், உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  மாவட்டத் தலைவராக வி.மணிகண் டன், செயலாளராக ராசி.ரவிக் குமார், பொருளாளராக உஸ்மான்  உட்பட 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில  செயற்குழு உறுப்பினர் அர்ஜூன்  நிறைவுரையாற்றினார். இதை யடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெருந்திரளானோர் பங் கேற்றனர்.