மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு
கோவை, ஜூலை 12- சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் கோவை மாநகர் வட்டக் கிளை மாநாட்டில் நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் கோவை மாநகர் வட்டக் கிளையின் 7 ஆவது மாநாடு சனியன்று சிவானந்த காலனியில் மதுசூதனன் தலைமை யில் நடைபெற்றது. இதில், மண்டலச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன் துவக்க உரையாற்றினார். செயலா ளர் டி.மணிகண்டன் வேலை அறிக்கையும், பொருளா ளர் ஏ.சாதிக் பாஷா வரவு செலவு அறிக்கையும் முன் வைத்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில், தலைவராக ஆர்.காளிமுத்து, செய லாளராக என்.தண்டபாணி, பொருளாளராக எஸ். விஜ யன் மற்றும் 23 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில், என்.தண்டபாணி நன்றி கூறினார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்கு
சேலம், ஜூலை 12- ஓமலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி பகுதிக் குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் (43) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக தலைமை ஆசிரிய ருக்கு புகார் வந்தது. மாணவிகளின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டதில், தங்கவேல் மாண விகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.