ரூ.6 கோடிக்கு கல்விக்கடன் வழங்கல்
ஈரோடு, செப்.17- ஈரோடு ஆட்சியரகத்தில் புதனன்று நடைபெற்ற கல் விக்கடன் வழங்கும் முகா மில், 68 மாணவர்களுக்கு ரூ.6.11 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடனுதவி வழங்கப் பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக சிறப்பு கல்விக்கடன் முகாம் புதனன்று நடைபெற்றது. இதில், 68 மாணவர்களுக்க ரூ.6.11 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுதவிகளை ஆட்சியர் ச.கந்தசாமி வழங்கினார். இதன் பின் அவர் பேசுகையில், இந்தாண்டு 3000 மாணவர்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் 571 மாணவர்க ளுக்கு ரூ.35.95 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கல்லூரி யில் சேரும் மாணவ மற்றும் மாணவியர்களுக் கும், ஏற்கனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்க ளுக்கும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் வங்கிகள் மூல மாக அவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப் பட்டு வருகிறது. கல்விக்கடன் பெற்ற மாண வர்கள், மற்றவர்களுக்கும் கல்விக்கடன் பெறும் வழிமுறைகள் குறித்து எடுத் துரைத்து உதவ வேண்டும், என்றார். இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்த குமார், மகளிர் திட்ட அலுவலர் மலர் விழி, கனரா வங்கி மண்டல துணை பொது மேலாளர் ஜி.சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்தன், மாநில கல்வி கடன் ஒருங்கிணைப்பாளர் வணங் காமுடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.