பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன்
கிருஷ்ணகிரி, அக்.9 – பர்கூரில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய கல்வி கடன் முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 35 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 41 லட்சம் மதிப்பிலான கல்வி கடனுக்கான ஆணைகளை வழங்கினார். மாநில அளவிலான கல்வி கடன் ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு உடனிருந்தனர்.
