ஐந்து பேர் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு
சேலம், செப்.24- ஐந்து பேர் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடந்த 17.08.2025 ஆம் தேதியன்று வேலூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கம் சேலம் கோட்டம் மெய்யனூர் கிளை TN30 N 2190 என்ற பேருந்தில் ஓட்டுனராக செந்தில்குமார் DR 9096 என்பவரும், நடத்துனராக சுப்ரமணி CR 4053 என்பவரும் ேலூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். அன்றைய தினம் இரவு சுமார் 8 மணி அளவில் மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் மலை இறக்கத்தில் கழகப் பேருந்துக்கு முன்னால் சென்ற ஜெனரேட்டர் ஏற்றி செல்லக்கூடிய பவர் யூனிட் பேருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விட்டது. தனது கண் முன்னால் பேருந்து ஒன்று விபத் துக்குள்ளானதை கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் செந் தில்குமார், நடத்துநர் சுப்பிரமணி ஆகியோர் தங்களது பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி, பயணிகள் துணையு டன், விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட ஐந்து நபர்களை பாதுகாப்பாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அன்றைய தினம் அரசு பேருந்தில் பயணம் செய்த லண்டன் வாழ் தமிழர் ஒருவர் லண்டன் சென்று அங்கி ருந்து அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குந ருக்கு மின்னஞ்சல் மூலம் விபத்து நடந்த உடன் தனக்கு என்ன என்று செல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் துரிதமாக செயல்பட்டு, விபத்தில் அடிப்பட்ட 5 பேரை காப்பாற்றி பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செயலை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இத்தகைய மனிதாபிமான செயலை செய்த ஓட்டுநர் நடத்துநருக்கு புதனன்று சேலம் மண்டல தலைமை அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் குணசேகரன், செந்தில்குமார் மற்றும் சுப்ரமணி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். சேலம் கோட்ட பொது மேலாளர் மோகன் குமார், துணை மேலாளர் (கூட்டாண்மை) அருள் முருகன், துணை மேலாளர் (வணிகம்) பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.