tamilnadu

img

குடிநீர் பற்றாக்குறை: அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்!

குடிநீர் பற்றாக்குறை: அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்!

தருமபுரி, செப்.30- குடிநீர் பற்றாக்குறையை போக்க நட வடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடு பட்ட பொதுமக்கள், பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய ஊராட்சி யாக தருமபுரி மாவட்டத்திலுள்ள இலக்கியம் பட்டி உள்ளது. இப்பகுதியில் உள்ள 15  ஆவது வார்டுக்குட்பட்ட வெங்கடேச பெரு மாள் கோவில் பகுதியில், கடந்த மூன்று மாத  காலமாக குடிநீர் பிரச்சனை உள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி  நிர்வாகத்திடம் முறையிட்டனர். அரசு அலு வலர்களிடம் பலமுறை மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று காலிக் குடங்களுடன் தருமபுரி - சேலம் தேசிய  நெடுஞ்சாலையில் சாலையில் மறியலில் ஈடு பட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற னர். ஆனால், அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் பேசுகை யில், கீழ் மாரியம்மன் கோவில் தெரு, ஜெக நாதன் கோவில் தெரு பிள்ளையார் கோவில்  தெரு உள்ளிட்ட பகுதியில் 200க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதிக்கு போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. கழிவு நீர் கால்வாயை முறையாக தூர்வாருவ தில்லை. தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவ சிய பணிகள் எதுவும் செய்து தரப்படுவ தில்லை என குற்றஞ்சாட்டினர். இதைய டுத்து உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக் கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பொது மக்கள் கலைத்து சென்றனர்.