tamilnadu

img

ஆட்டை இழுத்துச்செல்லும் நாய்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

ஆட்டை இழுத்துச்செல்லும் நாய்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை, ஜூலை 25 – கோவை கருப்புக்கடை சலாமத் நகர் பகுதியில் 6 நாய்கள் சேர்ந்து ஆட்டை கடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாநகராட்சிக்குட்பட்ட கரும்புக் கடை, புல்லுக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் அதி களவு சுற்றித் திரியும், வீடற்ற நாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் கரும்புக்கடை சலாமத் நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டை அங்கி ருந்த 6 நாய்கள் கொடூரமாக கடித்து இழுத்துச் சென்றது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் நாய்களை விரட்டினார், அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள்,  கோவை  மாநகராட்சிக்குட்பட்ட 82, 84, 86 ஆகிய வார்டு களில் ஆதரவற்ற தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. இதனால் அடிக்கடி பள்ளி  குழந்தைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். இது குறித்து ஏற்கனவே கோவை மாநகராட் சிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சலாமத் நகர் பகுதியில் 6 தெரு நாய்கள் ஆடு ஒன்றை கடித்து இழுத்தது, அதே போல் அருகே உள்ள பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டையும் நாய்கள் கடித்துள் ளது. குறிப்பாக புல்லுக்காடு பகுதியில் நாய்  கருத்தடை மையம் கொண்டு வந்ததிலிருந்து இந்த  பிரச்சனை இருந்து வருகிறது. இங்கு கருத்தடை செய்யப்படும் நாய்கள், இதே பகுதியில் விடுவ தால் அவை சாலையிலேயே சுற்றித் திரிகிறது.  இத னால் மதரசா மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் குழந் தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல்  இருசக்கர வாகனத்தில் செல்போரை பின்னால்  துரத்தி செல்வதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே விரைவில் நாய் கருத்தடை மையத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால், ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.