தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கி வைப்பு
சேலம், செப்.17- தீபாவளி பண்டிகைக்கு சேலத்தில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.4.92 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளு படி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பேசி னார். சேலம், கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி, புதனன்று தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபா வளி பண்டிகைக்கு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகை யுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், தஞ்சாவூர் பட்டு புடைவைகள், சேலம் பட்டுப் புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டுப் புடவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட் டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களி லும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.4.92 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்திற்கு ரூ.4.64 கோடி தீபாவளி விற்பனை இலக்காகவும், ஆத்தூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.28.00 இலட்சம் தீபாவளி விற்பனை இலக்காகவும் என மொத்தம் ரூ.4.92 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதி யில் 30% வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. மேலும் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்க ளுக்கு உதவிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்றார். இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் என்.சுந்தர் ராஜன், கைத்தறித் துறை துணை இயக்குநர் ஆர்.ஸ்ரீதரன், தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலைய மேலா ளர் மா.பாலசுப்ரமணியன் உட்பட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
செப்.26இல் குறைதீர் கூட்டம்
சேலம், செப்.17- சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் செப்.26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் செப்.26 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முதுநிலை கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அஞ்சல் வாடிக் கையாளர்கள் தங்களது புகார்களை சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என்ற முகவரிக்கு செப்.22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி
நாமக்கல், செப்.17- குமாரபாளையத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்து கூலி தொழிலாளி ஒருவர் உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் முதன்மை சாலைப் பகுதியில் திருமணம் மற்றும் திருவிழா விசேசங்களுக்கு பந்தல் மற்றும் அலங்கார செய்யும் தொழில் செய்து வருபவர் சண்முகம். செவ்வாயன்று ஈரோடு மாவட்டம், மஞ்சப்பட்டி கிராமத்தில் நடைபெறும் திருவிழாவிற்காக அலங்காரம் செய்வதற்காக தஞ்சாவூரைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள், நள்ளிரவு திரும்பியவர் களை தனது குடியிருப்பில் உள்ள மூன்றா வது மாடி அறையில் தங்க வைத்துள்ளார். அப்பொழுது தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாடு பகுதி சேர்ந்த விக்னேஷ் என்ற தொழி லாளி மொட்டை மாடிக்கு சென்று உறங்கி யுள்ளார். இதன்பின் புதனன்று அதிகாலை ஆறு மணிக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல எழுந்த பொழுது விக்னேஷ் காணா மல் தேடி உள்ளனர். அப்பொழுது விக்னேஷ் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பக்கத்து கட்டிடத்தில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குமாரபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர். அப்பகுதிக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை யினர் மாடியில் இருந்து சடலத்தை கயிற்றின் உதவியுடன் இறக்கி பிரேத பரிசோதனைக் காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷ் மாடியிலிருந்து விழுந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமுஎகச மாநாடு
நாமக்கல், செப்.17- தமுஎகச குறிஞ்சி கிளை மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட் டம், குறிஞ்சி கிளை மாநாடு செவ்வாயன்று கவிகரன் இல்லத்தில் நடைபெற்றது. திலக்கவிகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட் டச் செயலாளர் எஸ்.சேகரன் துவக்கவுரையாற்றினார். பஞ் சாலைத் தொழிலாளர் சம் மேளன மாநில உதவித்தலை வர் எஸ்.தனபால் வாழ்த்திப் பேசினார். கிளையின் செய லாளர் த.மோகன்குமார் வேலையறிக்கை முன்வைத் தார். இதில், கிளைத் தலை வராக ரா.கவிதா, செயலாள ராக த.மோகன்குமார், பொருளாளராக மு.சாமிநா தன் ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் ஜி.கோபி நிறைவுரையாற் றினார். முடிவில் ரா.கவிதா நன்றி கூறினார்.