மாவட்ட அளவிலான கபடிப் போட்டி துவக்கம்
நாமக்கல், செப். 8- நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கபடிப் போட்டிகள் திங்களன்று துவங்கியது. 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாவட்ட அள விலான ஆண்கள் கபடிப் போட்டி திருச்செங்கோடு அரசி னர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது. மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற திருச்செங்கோடு குமாரபாளையம், மல்ல சமுத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனூர், நாமக்கல், வேலூர் ஆகிய எட்டு மண்டலங்களைச் சேர்ந்த ஆண் கள் கபடி அணி கலந்து கொண்டு விளையாடினர். நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளை திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 8 அணி கள் விளையாடும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.