tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஒருவர் கைது

சேலம், ஜூலை 10- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தெற்கு பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48). இவர் கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று உறவினரின் வீட் டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த உறவினர் பெண்ணை  கடைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டில் தனியாக  இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என  சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது  தாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் புதனன்று சங்ககிரி அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆம்புலன்சில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது

கோவை, ஜூலை 10- பொள்ளாச்சி அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு  108 ஆம்புலன்சில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.  ஆபத்தான நேரத்தில், எவ்வித பதட்டமும் இல்லாமல் பிரசவம்  பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநரை பொது மக்கள் பாராட்டினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து  பொள்ளாச்சி கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஜாகிர்  உசேன். இவரது மனைவி மாற்றுத்திறனாளியான சரண்யா  குமாரி நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால் மருத்துவர் கள் ஆலோசனைப்படி வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந் தார். இந்நிலையில், சரண்யாவிற்கு புதனன்று பிரசவ வலி ஏற் பட்டது. 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததின் பேரில்  108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருக்கும் போது திடீரென பிரசவ  வலியால் சரண்யா துடித்துள்ளார். உடனடியாக ஆம்பு லன்ஸை நிறுத்திய ஓட்டுனர் இளைய பாரதி மருத்துவ உதவி யாளர் துர்கா தேவி இருவரும் துரிதமாக செயல்பட்டு சரண்யா விற்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் சரண்யாவிற்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள் பிறந்தது. உடனடியாக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்த னர். மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஓட்டுநர் மற்றும் உதவி  மருத்துவர் சிகிச்சை அளித்து காப்பாற்றியதை, அப்பகுதி மக் கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.