tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்க வேலம்பாளையம் மாநாடு

மாற்றுத்திறனாளிகள் சங்க வேலம்பாளையம் மாநாடு

திருப்பூர், ஆக.31- மாற்றுத்திறனாளிகள் சங்க 15.வேலம்பாளையம் நகர மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்பூர் மாவட்டம், 15.வேலம்பாளையம் நகர 5 ஆவது மாநாடு, காமாட்சி அம்மன் உலோகப் பாத்திர தொழிலாளர் சங்க கட் டிடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. நகரத் தலைவர் ஏ. லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி. ஜெயபால் துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பி.செல்வி, மாதர் சங்க மாவட் டப் பொருளாளர் ஆர்.கவிதா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். இம்மாநாட்டில், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் இதுவரை  உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக  ஆணை வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக் கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங் கத்தின் நகரத் தலைவராக ஏ.லோகநாதன், செயலாளராக கம லக்கண்ணன், பொருளாளராக குப்புசாமி உட்பட நகரக்குழு  உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலக்குழு உறுப் பினர் நா.சஞ்சீவ் நிறைவுரையாற்றினார்.