tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்க நல்லம்பள்ளி மாநாடு

மாற்றுத்திறனாளிகள் சங்க நல்லம்பள்ளி மாநாடு

தருமபுரி, ஆக.13- மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நல்லம்பள்ளி வட்ட மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்ட 4 ஆவது மாநாடு, அப்பகுதி யிலுள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாயன்று நடைபெற் றது. முன்னதாக, நல்லம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து மாநாட்டு அரங்கம் வரை பேரணி நடைபெற்றது. மாநாட்டிற்கு, வெங்கடாசலம் தலைமை வகித்தார். ரங்கசாமி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் தோ.வில் சன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, தலைவர் கே.ஜி.கரூரான், பொரு ளாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு 100 நாள் வேலையும், இலகுவான நான்கு மணி  நேர வேலையும், முழு நேர ஊதியமாக 336 ரூபாயும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைகளை ஏஏஒய் அட்டையாக மாற்றித்தர வேண்டும். ஆந்திரா மாநிலத்தைப் போன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக தேவராஜன், செயலாளராக ஆதிமூலம், பொரு ளாளராக மோகன், துணைச்செயலாளர்களாக குமரவேல், ஜெயக்கொடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.