ஆணி வேரை இழந்த குடும்பத்திற்கு உதவிட மாற்றுத்திறனாளி சங்கம் கோரிக்கை
கோவை, ஆக. 18 – குடும்பத்தின் வருவாய் ஈட்டி வாழ்வாதாரத்தை காத்துவந்த மகன் கொலையான நிலையில், பரிதவித்து வரும் மாற்றுத்திறனாளி குடும் பத்தை பாதுகாக்க, உரிய நிதி உதவியை செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ள னர். ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி, ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (46), அய்யம்மாள் ஆகிய இருவரும் பார்வை மாற்றுத்திறனாளி கள். இவர்களின் மூத்த மகன் பிரதீப் குமார் (17), டிப்ளமோ படித்துக் கொண்டிருந்தார். இவர்களின் இரண்டாவது மகன் அச்சுதன் (15) கால் வளைந்த மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி, இரவு சுமார் 8 மணியளவில் பிரதீப் குமார் தனது நண்பர்களுடன் சமத்தூர் பேரூராட்சியில் வசிக்கும் மாரி முத்து மற்றும் அவரது மகன் நடராஜ் ஆகியோரிடம், மினிலாரிக்குரிய கூலி பாக்கி வாங்க சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. வாக்குவாதம் முடிந்த பின், பிரதீப் குமாரும் அவரது நண் பர்களும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். தான் சென்ற இருசக்கர வாகனம் மாரிமுத்து வீட்டில் இருந்ததால், அதை எடுப்பதற்காக பிரதீப் குமார் மட்டும் தனியாக மீண்டும் சென்றுள் ளார். அப்போது, ஆத்திரமடைந்த மாரிமுத்து மற்றும் நடராஜ் ஆகி யோர் ரீப்பர் கட்டையால் பிரதீப் குமாரின் தலையில் தாக்கியுள்ளனர். இதில் மண்டை உடைந்ததில், பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்து மற்றும் நடராஜை கைது செய்துள்ளது. பார்வை மாற்றுத்திறனாளிகளான ரங்கராஜ் - அய்யம்மாள் தம்பதியினருக்கு, தங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த பிரதீப் குமாரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும் பத்தின் வருமானம் ஈட்டும் நபராகக் கருதப்பட்ட மகனை இழந்து தவிக் கும் அந்தக் குடும்பத்திற்குத் தமிழ்நாடு அரசு, அதிகபட்ச நிதி உதவி யும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கையில், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.மகாலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ்.கனகராஜ், விஜயராகவன், இளைய ராஜா, கே.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.