tamilnadu

img

பட்டியலினத்தவர் பகுதியில் கோயில் கட்ட அனுமதி மறுப்பு: சிபிஎம் தலையீட்டால் தீர்வு

பட்டியலினத்தவர் பகுதியில் கோயில் கட்ட அனுமதி மறுப்பு: சிபிஎம் தலையீட்டால் தீர்வு

தருமபுரி, அக்.9- பட்டியலின மக்கள் வசிக்கும் பகு தியில் கோயில் கட்ட நகராட்சி நிர்வா கம் அனுமதி மறுத்ததால், சிபிஎம் தலையீட்டையடுத்து கட்டுமானப் பணி துவங்கியது.  தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 17- ஆவது வார்டு செங்கொடி புரம் பகுதி யில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. இங்குள்ள வர்களில் பெரும்பகுதியினர் தரும புரி நகராட்சியில் தூய்மைப் பணியா ளர்களாகவும், பிறர் கூலித் தொழி லாளராகவும் உள்ளனர். இப்பகுதி யில் சுமார் 90 ஆண்டுகளாக, அதா வது மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, சிறிய அளவில் முத்து மாரி யம்மன் கோயில் ஒன்று உள்ளது. இப்பகுதி மக்கள் இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமைதோறும் பூஜை  செய்து வழிபடுவதுடன், வருடந் தோறும் திருவிழாவும் நடத்துவது வழக்கம். சமீபத்தில், கழிவுநீர் கால்வாய்க் காகக் குழி தோண்டும்போது இந்த  கோயிலின் சுவர் இடிந்து சேதமடைந் தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்களது சொந்த நிதியில் கோயிலைப் புனரமைக்கும் பணி யைத் துவங்கினர். இந்நிலையில், கோயில் கட்டு மானப் பணி துவங்கியதைக் கண்ட நகராட்சி நிர்வாகம், உடனடியாகப் பணியைத் தடுத்து நிறுத்தியது. இத னால் அப்பகுதி மக்கள் மிகுந்த மன  உளைச்சலுக்கு ஆளாகினர்.  இதையடுத்து, அப்பகுதி மக்கள்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லி பாபுவை அணுகினர். அவர் உடனடி யாகத் தலையிட்டு, தருமபுரி நக ராட்சி ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையின் பலனாக, கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடர நக ராட்சி நிர்வாகம் அனுமதி அளித் தது. இதனைத் தொடர்ந்து, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லி பாபு, தருமபுரி நகரச் செயலாளர் ஆர்.  ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர்  எஸ். நிர்மலாராணி மற்றும் கன்னு பையன், வள்ளி ஆகியோர் முன்னி லையில் மீண்டும் கோயில் கட்டும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. நீண்ட நாள் பிரச்சினைக்கு சிபிஎம் தலைமையிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைத்ததால் செங்கொடி புரம் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.