tamilnadu

img

கந்து வட்டியை ஒழிக்க கோரியும், பரிமளாவுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்

அவிநாசி, மே 25- கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பரிமளாவிற்கு நீதி கேட்டும், கந்துவட்டியை ஒழிக்க வலியுறுத்தியும் புதனன்று அவிநாசியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள ராயம்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் பரிமளா (30). இவர்  கந்துவட்டி கொடுமையால் திங்களன்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில், உயிரிழந்த பரி மளாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை உடனடி யாக வழங்க வேண்டும். பேரூராட்சி சுகாதார முன்களப் பணியாளரான பரிமளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் அவிநாசி - சேவூர் செல்லும் சாலை யில் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்துசாமி தலைமை  வகித்தார்.

இதில், தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம்,  மாவட்டத் தலைவர் ஆர்.குமார்,  மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்  முருகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, சிஐடியு நிர்வாகிகள் வேலுச்சாமி, பழனிச்சாமி, திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர் தேவராஜன், மாதர் சங்க நிர்வாகி தேவி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி சண்முகம், ஆதித்தமிழர் பேரவையின் விடுதலை செல்வன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையின் பௌத்தன், தமிழ் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தென்னரசு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதில், கந்துவட்டி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும். உயிரிழந்த பரிமளாவிற்கு நீதி வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

;