வாடிக்கையாளர் அலைக்கழிப்பு
கோவை, அக்.9- வங்கி ஊழியர்கள் செய்த தவறுக்கு, ரூ.60 ஆயிரம் பணத்தை திரும்ப பெற அலைக்கழிப்பு செய்ததால், வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். கோவை, சேரன் மாநகர் இந்தியன் வங்கி கிளையில் நிசாந்த் என்ற வாடிக்கையாளர் ரூ.60 ஆயிரம் பணத்தை நீதி மன்ற தேவைக்காக டி.டி எடுக்க முயன்றுள்ளார். அப்போது தவறுதுலான பரிவர்த்தனையை வங்கி ஊழியர்கள் மேற் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவசர தேவைக்காக வாடிக்கையாளர் மேற் கொண்ட பரிவர்த்தனை தடைபட்டது. இதனால் தனது ரூ.60 ஆயிரம் பணத்தை திரும்பக் கேட்டார். ஆனால், வங்கி ஊழியரக்ள் இரண்டு, மூன்று நாட்கள் காத்து இருங்கள் என தெரிவித்தனர். அவசர தேவைக்காக தான் மேற்கொண்ட பரி வர்த்தனையை நீங்கள் தவறு செய்து விட்டு அதற்கு நான் ஏன்? காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். இருந்த போதிலும் அவர்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வங்கி நிர்வாகத்தின் தவறால் தான் அவதிப்பட்டுள்ளேன் என சமூக வலைதளங்க ளில் பதிவிட்டு நிஷாந்த் தனது வேதனையை பதிவு செய்துள் ளார்.