tamilnadu

img

கிரிப்டோ கரன்சி மோசடி: கோவையில் 100 பேர் புகார்

கிரிப்டோ கரன்சி மோசடி: கோவையில் 100 பேர் புகார்

கோவை, அக்.8- கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக  லாபம் ஈட்டலாம் என்று ஆசை காட்டி பல  கோடி ரூபாய் மோசடியில் பாதிக்கப் பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புதனன்று புகார் அளித்த னர். கோவையைச் சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் மற்றும் அவரது குழுவினர், GROKR என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட் டிப்பு லாபம் ஈட்டலாம் என்று வாட்ஸ்அப்  வழியாக தகவலைப் பரப்பியுள்ளனர். இதை நம்பி பலரும், GROKR என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, முத லீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில், லாபத்தை டாலரா கவே அதே செயலியில் மோசடி கும்பல்  வழங்கியுள்ளது. அவ்வாறு கொடுக்கப் பட்ட பணத்தையும் செயலியில் இருந்து  எடுக்க விடாமல், மீண்டும் முதலீடு செய் யவே வலியுறுத்தியுள்ளனர். இதனால்,  அதிக லாபம் கிடைக்கிறது என்று எண்ணி, மக்கள் நகைகளை அடகு  வைத்தும், வட்டிக்குப் பணம் வாங்கியும்  முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், திடீரென செயலி யின் Log-in நிறுத்தப்பட்டு, செயலி யைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற் பட்டது. இதனால் கடன் வாங்கி முதலீடு  செய்தவர்கள் பணத்தை எடுக்க முடியா மல் திணறினர். ஒரு கட்டத்தில் பாதிக் கப்பட்டவர்கள் ஹேமந்த் பாஸ்கரைத் தொடர்பு கொண்டபோது, ‘ஏதும் செய்ய முடியாது’ என்று அவர் கூறிய தாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, கோவை, திருப் பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரிய லூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சுமார்  100-க்கும் மேற்பட்டோர், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புதனன்று புகார் மனு அளித்துள்ளனர். தங்களது பணத்தை மீட்டுத் தர வேண் டும் என்று கண்ணீர் மல்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.