tamilnadu

img

யானைகளால் பயிர் நாசம்:  நிவாரணம் வழங்க கோரிக்கை

யானைகளால் பயிர் நாசம்:  நிவாரணம் வழங்க கோரிக்கை

தேன்கனிக்கோட்டை, செப்.29- தேன்கனிக்கோட்டை வனச்சகரம், நொகனூர் வனப்பகுதியில் 5 யானைகள் முகா மிட்டுள்ளன. இவை தினமும் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து தக்காளி, கேரட், நெல், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தற்போது கொத்தூர் கிராமத்தில் பார்த்திபன் தோட்டத்தில் புகுந்த யானைகள் காய்கறி கள் மற்றும் ரோஜா செடி களையும் மிதித்து சேதப்படுத்தியுள்ளன. யானைகளை விரட்டவும், அழிக்கப்பட்ட வயல்க ளுக்கு போதிய நிவார ணம் அளிக்கவும் மாவட்ட ஆட்சியர் வனத்துறையின ருடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.