இலவச வீட்டுமனை கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், அக்.24- பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள இலுப்புலி கிராமம், குளத்துவளவு பட்டியலின மக்கள் தெரு வில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற னர். குடியிருப்பு அருகே இலுப்புலி ஏரி 150 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து, மண் சுவர்கள் இடிந்து படிப்படி யாக வீடுகள் இடிந்து கொண்டே உள்ளன. சாலை வசதி, சாக்கடை வசதி இல்லாததால் மழை நீர் சூழ்ந்து சேறும், சகதிகமாக ஊரே காணப்படுகிறது. இதனால் இலவச வீட்டு மனை வேறு இடத்தில் வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மூலம் வீடுகள் கட்டித்தர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்புலி கிராம நிர்வாக அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கிளைச் செயலாளர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சு.சுரேஷ், மூத்த தோழர் பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.கிட்டுசாமி, ஆர்.ஈஸ்வரன், சிறுபான்மை நலக்குழு நிர்வாகி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சத்யா நகர் கிளைச் செயலாளர் பி.கே.ரவி நன்றி கூறினார்.
