tamilnadu

img

புளியம்பாறையில் பாலம் அமைக்கக்கோரி எம்.பி.,யிடம் சிபிஎம் மனு

புளியம்பாறையில் பாலம் அமைக்கக்கோரி எம்.பி.,யிடம் சிபிஎம் மனு

உதகை, அக்.7- புளியம்பாறையில் ஆற் றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க நடவடிக்கை  எடுக்கக்கோரி நீலகிரி நாடா ளுமன்ற உறுப்பினரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், புளி யம்பாறை நாரங்கடவு ஆற் றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும். நிலக்கோட்டை ஊராட்சி, அட்டக் கடவு முதல் ஓலப்புறா மற்றும் குமரிமாடு, அம் பலமுலா, பழங்குடியினர் காலனி, அம்பல மூலா, பிஎச்சி சாலைகளை உடனடியாக சரி  செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றக்கோரி மார்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா-விடம்  செவ்வாயன்று மனு அளித்தனர். அம் மனுவை பெற்றுக் கொண்ட ஆ.ராசா,  உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்ப டும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், பந்தலூர் ஏரியா செயலாளர் ரமேஷ், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வாசு,  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராசி  ரவிக்குமார், சிபிஎம் கிளைச் செயலாளர்கள் ஹசைன், சுபைர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.