tamilnadu

img

பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தாத சாக்கடைக் கால்வாயை தூர்வார மண்டலத் தலைவரிடம் சிபிஎம் தலைமையில் மனு

பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தாத சாக்கடைக் கால்வாயை தூர்வார மண்டலத் தலைவரிடம் சிபிஎம் தலைமையில் மனு

திருப்பூர், அக். 8 –  திருப்பூர் மாநகரில் எம்.எஸ்.நகர்  அம்பேத்கார் நகரில் ஆண்டுக்க ணக்கில் தூய்மைப்படுத்தாமல் இருக்கும் சாக்கடைக் கால்வாயை  முழுமையாகத் தூர் வாருவது உள் பட அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் அப்பகுதி மக்கள் இரண்டாவது மண்டலத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திருப்பூர் மாநகரம் 17 ஆவது வார்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து புதன்கி ழமை மண்டலத் தலைவர் தம்பி  கோவிந்தராஜிடம் மனு அளிக்கப்பட் டது. இதில் அம்பேத்கர் நகர், வி.ஆர்.பி.நகர், ஜெபிநகர் பகுதிகளில் அடிப் படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். குறிப்பாக கடந்த  நான்கு ஆண்டுகளுக்கு மேலாக  சாக்கடைக் கால்வாய் தூர்வாரப்படா மல் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள்,  மண் நிரம்பி அடைப்பு ஏற்பட்டுள் ளது. இதனால் தண்ணீர் வெளியேறிச்  செல்ல வழியில்லாமல் சாக்கடை நீரில் புழுக்கள், கொசுக்கள் உற்பத்தி யாகி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகி றது. எனவே முழுமையாக தூர்வார  வேண்டும். அம்பேத்கர் நகர் சமுதாயக் கூடத்தை முழுமையாக புதுப்பித்து மின் விசிறி, உணவு அறை, குளிய லறை, தண்ணீர் வசதி செய்து கொடுத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இப்பகுதி பட்டியலின மக் களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கர் நகரில்  உள்ள இடத்தில் சிறுவர் பூங்கா அமைத்துத்தர வேண்டும். விஆர்பி நகர் ரோடு பனைமரத் தோட்டம் செல்லும் பிரதான சாலை  குண்டும், குழியுமாக உள்ளது. எனவே அதை சீரமைத்து காங்கிரீட்  சாலை அமைத்துத் தர வேண்டும், வீடுகளுக்கு வாரம் இரு முறை நான் காவது குடிநீர்த் திட்டத்தில் குடிநீர்  வழங்க வேண்டும், தெரு விளக்கு களை சீரமைப்பதுடன், தேவையான பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்துத்தர வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை கேட்டறிந்த மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகா ரிகளிடம் உடனடியாகத் தொடர்பு  கொண்டு பேசினார். சாக்கடைத் தூர் வாரும் பணியை விரைந்து செய்து  தருவதாகவும், இதர கோரிக்கை களை நிறைவேற்றுவதாகவும், சமு தாய கூடத்தை சீரமைக்க நடவ டிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி யளித்தார். இந்த சந்திப்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி,  மாநகரச் செயலாளர் பா.சௌந்தரரா சன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். மைதிலி, மாநகரக்குழு உறுப்பி னர்கள் பி.மனோகரன், தமிழ்வா ணன், கிளைச்செயலாளர்கள் ரமேஷ், சண்முகம் உள்ளிட்ட கட்சி  உறுப்பினர்கள், அப்பகுதி பெண்கள்  உள்ளிட்ட பொதுமக்கள் என 50க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.