tamilnadu

img

டெண்டர் விட்ட பணிகளை உடனே துவங்க சிபிஎம் கோரிக்கை

டெண்டர் விட்ட பணிகளை உடனே துவங்க சிபிஎம் கோரிக்கை

அவிநாசி,ஆக.25 திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெண்டர் விட்ட பணி களை துவங்கக்கோரி. நகர்மன்ற தலை வரிடம் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியி னர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட 14 ஆவது  வார்டு ராமநாதபுரம் வீதி, ஏடி காலனி  பகுதியில் 75க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட  நாள் கோரிக்கையான சாக்கடை, சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள் ளிட்ட பிரச்சனைகள் உள்ளது. இது குறித்து, நகர்மன்ற கூட்டத்தில், சிபிஎம் நகரமன்ற உறுப்பினர் தேவராஜன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந் தார்.  இதனைத் தொடர்ந்து திருமுருகன் பூண்டி நகராட்சியில் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை. இத னையடுத்து, டென்டர் விட்ட பணிகளை  உடனடியாக துவங்கக் கோரி நகர  மன்ற தலைவர் குமாரிடம், சிபிஎம் தலை மையில் பொதுமக்கள் கோரிக்கை மனு  அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தலை வர், விரைவில் பணிகள் நடைபெறும் என உறுதியளித்தார். முன்னதாக மனு அளிக்கும் இயக் கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நகர மன்ற உறுப்பினர் தேவராஜன், சுப்பிரமணியம், முன்னாள் கிளைச் செய லாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.