கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்
சேலம், ஆக.30- சேலம் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த திமுக கவுன்சிலர்கள், முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மேயர் ராமச் சந்திரன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 18க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வருகை தரவில்லை. இக்கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கள், சேலம் மாநகர பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாகவும், தெருநாய்களின் அச்சுறுத்தல் அதிகள வில் உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்து வரு கின்றனர். இதுசம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளி டம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பல வார்டு பகுதிகளில் முறையான குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தங்கள் வார்டு பகுதியில் மக்களை நேரடி யாக சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போதையில் இயக்கியதால் கல்லூரி வாகனம் விபத்து; மாணவி படுகாயம்
சேலம், ஆக.30- ஓமலூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கத்தில், வாக னம் விபத்தில் சிக்கி மாணவி ஒருவர் படுகாயமடைந் தார். சேலம் மாவட்டம், நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஓமலூர் சுங்கச்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் பத்மாவாணி கலை அறிவி யல் கல்லூரியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று காலை அன்னதானப் பட்டி பகுதியில் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற லாரியின் மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் சௌந்தர்யா என்ற மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பேருந்தை ஓட்டிய சுரேஷ்குமார் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் பெண் பலி
தருமபுரி, ஆக.30- தருமபுரியில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தார். 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு நகரப் பேருந்து, காரிமங்கலம் நோக்கி வெள்ளியன்று மாலை சென்று கொண்டிருந்தது. தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப் பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் பாப் பாரப்பட்டியை அடுத்த பாடியைச் சேர்ந்த வீரமணி (38), அவ ரது மனைவி நந்தினி (28), குழந்தை தீரன் (3) ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் நந்தினி நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தார். வீரமணி, தீரன் ஆகியோர் காயமடைந் தனர். அதேபோல, மற்றொரு வாகனத்தில் சென்ற பாப்பா ரப்பட்டி அருகே உள்ள மூக்கம்பட்டியைச் சேர்ந்த பச்சமுத்து (51) பலத்த காயமடைந்தார். காயமடைந்த அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து தரும புரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.