பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜூலை 17- தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும், பாபநாசம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆய்வுக் குழு செயலாளர் ரவி, திருச்சி விற்பனைக் குழு முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், கும்பகோணம் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,096 விவசாயிகள், 231 மெ.டன் அளவு பருத்தி எடுத்து வந்தனர். மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சார்ந்த வணிகர்கள், கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பிற மாவட்டத்தை சார்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் கலந்துக் கொண்டு அதிகபட்சம் ரூ.7,489, குறைந்தப் பட்சம் ரூ.7,109, சராசரி ரூ.7,356 விலை நிர்ணயித்தனர். மதிப்பு ரூ.1.69 கோடி.