கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, அக்.7- ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபடும் தஞ்சாவூர் சரக துணைப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தஞ்சாவூர் மண்டலத்தில் ஊழியர் விரோதப்போக் கில் செயல்படும் சரக துணைப் பதிவாளர் விநாசாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத் துறை யில் அனைத்து பணியிடங்களுக்கும் பதிவுறு எழுத்தர் முதல் கூட்டுறவு சார் பதிவாளர் நிலைவரை பதவி உயர்வு வழங்கிடும்போது, கலந்தாய்வு முறையில் மண் டல ஒதுக்கீடு செய்து தரவேண்டும். 6 மணிக்கு மேல் காணொலி ஆய்வுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், 6 மணிக்கு மேல் ஆய்வுக்கூட்டம் நடத்தும் உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.20 கோடிக்கு மேல் கடன் நிலுவை வைத்துள்ள பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குநர் பணியிடம் உரு வாக்கிட வேண்டும். தனியார் தொழில் முனைவோர் நடத் தும் முதல்வர் மருந்தகங்களுக்கு லாபத்தை அதிகரித்து தரும் நோக்கில், கூட்டுறவு சார்பதிவாளர்களை பயன் படுத்தக்கூடாது. அடிப்படை கட்டமைப்புகளை போது மான அளவிற்கு ஏற்படுத்தாமல், தாயுமானவர் திட் டத்தை இரண்டு தினங்களில் செயல்படுத்த வேண்டு மென்று அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.சி.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாக்கியவதி, பொருளாளர் இனி யன், இணைச்செயலாளர்கள் ராமன், விஜயகுமார் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், மாவட்ட இணைச்செயலாளர் மீன் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
