ஆன்லைன் வியாபாரத்தை கட்டுப்படுத்திடுக
உடுமலை, ஆக.14- ஆன்லைன் வியாபா ரத்தை கட்டுப்படுத்த தனி சட்டத்தை தமிழக அரசு நடை முறைபடுத்த வேண்டும் என வியாபாரிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. மடத்துக்குளம் தாலூகா, துங்காவி வியாபாரிகள் சங் கத்தின் சார்பில் புதனன்று, துங்காவி முருகன் திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்க விழா நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவர் ஜோசப் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதில், ஆன்லைன் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். அனைத்து வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு தனி நலவாரிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உடுமலை தாராபுரம் சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நடைபெற்ற சங்க விழாவில் சிஐடியு மாநிலச் செயலாளர் சந்திரன், சிஐ டியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீ சன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உடு மலை தாலூக்கா செயலாளர் கனகராஜ், பொதுத்தொழிலாளர் சங்கத்தின் உடுமலை தாலூகா தலைவர் ரங்கநாதன், மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றி யச் செயலாளர் சசிகலா மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.ஆர்.மதுசூதணன் நிறைவுரையாற்றி னார்.