மா ஏற்றுமதி குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
சேலம், செப்.13- சங்ககிரியில் தோட்டக்கலைத்துறை, மலைப்பயிர்கள் துறை சார்பில், மா ஏற்று மதி குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற் றது. சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறை, மலைப் பயிர்கள் துறை சார்பில், மா ஏற்று மதி குறித்து விவசாயிகள் மற்றும் வியா பாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம், சங்க கிரி கோட்டாட்சியர் கூட்டரங்கில் வெள்ளி யன்று நடைபெற்றது. தோட்டக்கலை துணை இயக்குநர் மஞ்சுளா தலைமை வகித்தார். உதவி இயக்குநர் விஷ்ணுபிரியா வரவேற் றார். சேலம் வேளாண் விற்பனைக் குழு முது நிலை செயலாளர் சுரேஷ் பாபு, வேளாண்மை துணை இயக்குனர் சுஜாதா, சென்னை முது நிலை மேலாளர் பரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப் போது, மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி வாய்ப்பு கள், ஏற்றுமதிக்கான பின் செய் நேர்த்தி, தொழில்நுட்பங்கள் மற்றும் தொகுப்பு அணுகுமுறையில் பழங்களின் மதிப்பு கூட்டு, சங்கிலி மேம்பாடு குறித்தும், கல்தார் பயன் படுத்துவதை தவிர்த்தல், பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்துவதை தவிர்த்தல் ஆகியவை குறித்து எடுத்துரைக் கப்பட்டது. முடிவில், தோட்டக்கலை உதவி அலுவலர் திருப்பதி நன்றி கூறினார்.