கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் நிவாரணம்
திருப்பூர், அக். 4 - கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் நெரி சலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரணம் வழங்கினர். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்கள் நான்கு பேரின் குடும்பங்க ளுக்குத் தலா ரூ.2.50 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் கரூர் எம்.பி. ஜோதிமணி, காங்கிரஸ் தேசியச் செயலா ளர் கோபிநாத் பழனியப்பன் ஆகியோர் இழப்பீடு தொகைக் கான காசோலைகளை வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். எம். பழனிசாமி, மாநிலச் செயலாளர் டி.செல்வக்குமார் உள் ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விஜய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்யக் கோரிக்கை
திருப்பூர், அக். 4 - கரூரில் தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அந்த கட்சியின் தலைவர், நடிகர் விஜய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று ஆதித் தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு காவல் துறை இயக்குநருக்கு, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத் தன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தவெக கரூ ரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் இறந்து விட்டனர். விஜய் கண்முன்னே நடைபெற்ற இந்த சம்ப வத்தில் உயிரிழந்த 41 பேரில் அருந்ததியர் (எஸ்.சி - ஏ) சமூகத் தைச் சேர்ந்தவர்கள் 7 பேர் உள்ளதால் அவரையும் வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். அவர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவுத்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாயுமானவர் திட்டம் இன்று ரேசன் பொருள் விநியோகம்
திருப்பூர், அக். 4 - திருப்பூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் இல்லம் தேடி நியாய விலை கடை அத்தியாவசியப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (இன்று) மற்றும் திங்கட்கிழமை விநியோ கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட முதி யோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே நேரில் சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய நியாய விலை கடை பொருட்கள் மாதந்தோ றும் 2 ஆவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதி (ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை) ஆகிய 2 நாள்களில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட வுள்ளன. மேலும், இந்த திட்டம் சார்ந்த பயனாளிகள் தங்களு டைய கைப்பேசி எண் மற்றும் முகவரி மாற்றம் ஏதும் இருப் பின் சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் அருகே உள்ள நியாய விலைக் கடைகளில் தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய சிறுகதைப் போட்டி: திருப்பூர் எழுத்தாளர் கதைக்கு ஊக்கப் பரிசு
திருப்பூர், அக். 4 - துபாய் - ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கானல் அமீரகம் இலக்கிய அமைப்பு நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி 2025-இல் திருப்பூர் எழுத்தாளர் த.குணசுந்தரியின் மீயொலி சிறுகதைக்கு ஊக்கப் பரிசு கிடைத் துள்ளது. இது குறித்து த.குணசுந்தரி தனது முக நூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: கானல் அமீரகம் நடத்திய உலகளாவிய சிறுக தைப் போட்டி 2025 இல் மொத்தம் 384 சிறு கதை களில் இருந்து சிறந்த 20 சிறுகதைகள் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கின்றன. கானல் அமீரகம் சிறந்த முறையில் செயல் பட்டு வரும் துபாய் இலக்கிய அமைப்பு. மிக நேர்த்தியான முறையில் போட்டிகள் நடத்தப் பட்டு குறித்த தேதியில் முடிவுகள் அறிவிக் கப்பட்டது. முன்னணி எழுத்தாளர்கள் பல ரால் முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன் றாம் கட்டம், இறுதிக்கட்டம் என பல சுற்றுக ளுக்கு பிறகு சிறந்த கதைகள் தேர்வு செய்யப் படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் தேர்வாகும் கதைகள் குறித்து தொடர்புடைய படைப்பா ளிகளுக்கு மின்னஞ்சலில் அறிவிக்கப்படு கின்றன. இறுதியில் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு மிக வெளிப்படையாகவும், நேர்மையுடனும் இந்த சிறந்த கதைகள் தேர்வு செய்யப்பட் டுள்ளன. குறிப்பாக தனது ஆதர்ச எழுத்தா ளர் தீபா ஜானகிராமன் மற்றும் எழுத்தாளர் அதிஷா ஆகியோர் உள்ளிட்ட எழுத்தாளர்க ளால் தமது மீயோலி கதை தேர்வு செய்யப்பட் டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குணசுந்தரி தெரிவித்துள்ளார். தேர்வு செய் யப்பட்ட 20 சிறுகதைகள் விரைவில் புத்தகமா கவும் வெளியிட இருக்கிறது என்றும் குண சுந்தரி தெரிவித்திருந்தார்.
காந்தி ஜெயந்தி நாளில் விடுமுறை அளிக்காத 72 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
திருப்பூர், அக்.4 - அரசு விடுமுறை தினமான காந்தி ஜெயந் தியன்று விடுமுறை அளிக்காத 72 நிறுவன உரி மையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என தொழிலாளர் உதவி ஆணை யர் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி கூறியுள் ளதாவது, காந்தி ஜெயந்தி வியாழனன்று தேசிய விடுமுறை தினமாகும். இதை யொட்டி, திருப்பூர், காங்கேயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடை கள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங் கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்க ளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், விடுமுறை தினத்தில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் அல்லது ஊதியத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர் பான விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங் கள் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வா ளர்களுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரி விக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த் தியிருந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களை வியாழக்கிழமை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக 35 கடைகள் மற்றும் நிறுவனங்க ளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்த தில் 25 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. 49 உணவு நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 47 விதிமீறல்கள் கண்டறியப்பட் டன. அதன்படி மொத்தம் 84 நிறுவனங்க ளில் ஆய்வு செய்ததில் 72 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு உரிமையா ளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.