தோழர் பி.பி.கந்தசாமி படத்திறப்பு
தருமபுரி, ஜூலை 16- சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினராக செயல்பட்ட தோழர் பி.பி.கந்தசாமி-யின் படத்திறப்பு நிகழ்ச்சி செவ் வாயன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாளை யம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் பி.பி.கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றி யக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் ஒன்றியத் தலைவராக திறம்பட பணியாற்றி னார். மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காகவும், விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் முன்னிற்றவர். இந்நிலையில், அவரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் பாளையம் புதூர் கிராமத்தில் செவ்வாயன்று, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எஸ்.எஸ்.சின்னராசு தலைமையில் நடைபெற் றது. மூத்த தலைவர் பி.இளம்பரிதி, அவரின் உருவப் படத்தை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், எம்.முத்து, சோ.அருச் சுனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லை யன், கே.எல்லப்பன், முனியப்பன், ராமன், காளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.